Home நாடு சிலுவை விவகாரம்: சட்டத்தை மீறியிருந்தால் நிச்சயம் குற்றம் சாட்டப்படுவர் – நஜிப் அறிவிப்பு

சிலுவை விவகாரம்: சட்டத்தை மீறியிருந்தால் நிச்சயம் குற்றம் சாட்டப்படுவர் – நஜிப் அறிவிப்பு

530
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 21 – பலத்த கண்டனங்களைத் தோற்றுவித்துள்ள சிலுவை அகற்றப்பட்ட விவகாரம் குறித்து இன்று கூடிய அமைச்சரவை விவாதித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் அவர்கள் மீது தேச நிந்தனை சட்டம் அல்லது மற்ற சட்டங்களின் அடிப்படையில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் என பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் அறிவித்துள்ளார்.

najibகாவல் துறையை இந்த விவகாரம் குறித்து விசாரிக்கும்படி பணித்துள்ளதாகவும் நஜிப் கூறியுள்ளார்.

நாட்டில் அமைதியையும், இன நல்லிணக்கத்தையும் உறுதி செய்வதற்காகவும், எல்லா இனங்களையும், மதங்களையும் பாதுகாப்பதற்காகத்தான் தேசநிந்தனை சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மக்கள் எல்லா காலத்திலும் அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டபடி, நாட்டின் சட்டங்களையும், மற்ற மதங்களையும் மதிக்க வேண்டும் என்றும் நஜிப் வலியுறுத்தினார்.

சிலுவை சம்பவம் போன்று பல இன சமுதாயத்தில் பதட்டத்தை உருவாக்கும் நிலைமை இருந்தால் அதனை ஆர்ப்பாட்டக்காரர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு விவாதித்திருக்க வேண்டும் என அமைச்சரவை ஒப்புக் கொண்டதாகவும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய தேவாலயம் செயல்பட்டு வந்த இரட்டை மாடி கட்டிடத்தில் அவ்வாறு மத மையமாகச் செயல்பட அனுமதிக்கும் அதிகாரம் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் நஜிப் சுட்டிக் காட்டியுள்ளார்.