Home இந்தியா ராஜிவ் காந்தி கொலையாளிகளுக்கு மரண தண்டனையில்லை – உச்ச நீதிமன்றம் மறு உறுதி

ராஜிவ் காந்தி கொலையாளிகளுக்கு மரண தண்டனையில்லை – உச்ச நீதிமன்றம் மறு உறுதி

603
0
SHARE
Ad

Rajiv Ghandi 440 x 215புதுடெல்லி, ஏப்ரல் 1 –  ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. அந்த முடிவு மீதான மத்திய அரசின் மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடிசெய்துள்ளது.

#TamilSchoolmychoice

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் கடந்த மாதம்உத்தரவிட்டிருந்தது. அத்துடன், மாநில அரசு விரும்பினால் அவர்களை விடுதலைசெய்யலாம் என்றும்  கருத்து தெரிவித்திருந்தது.

இந்த தண்டனை குறைப்பிற்கான தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

13-perarivalan-santhan-murugan-nalini-s-jayakumar-p-ravichandran-1-600இந்த மனு மீதான தீர்ப்பு இன்றுவெளியாகியது. அதன்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலானஅமர்வு இன்று மத்திய அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இம்மூவர் மற்றும் நளினி உட்பட இவ்வழக்கில் தொடர்புடைய ஏழு பேரை விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.