Home நாடு முன்வைத்த காலைப் பின் வைக்க மாட்டேன் – நஜிப் திட்டவட்டம்

முன்வைத்த காலைப் பின் வைக்க மாட்டேன் – நஜிப் திட்டவட்டம்

500
0
SHARE
Ad
najib

கோலாலம்பூர், மே 21 – தனது கொள்கைகள் மற்றும் தலைமைத்துவம் பற்றித்  தொடர்ந்து குறை கூறல்கள் வந்து கொண்டிருந்தாலும், முன்வைத்த காலைப் பின்வைக்கப் போவதில்லை எனப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

“அண்மைய காலமாகத் தொடர்ந்து பல்வேறு சவால்களையும், தடைகளையும் எதிர்கொண்டாலும், இந்த அரசும், நானும் ஒரே ஒரு பாதையைத் தான் தேர்ந்தெடுப்போம். பின்னே திரும்பிப் பார்க்கப் போவதில்லை” எனப் பிரதமர் நஜிப் நாடாளுமன்றத்தில் இன்று 11வது மலேசியத் திட்டத்தை அறிவித்த போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “அரசாங்கம் நேர்மையான முறையில், மொத்தமாக வழங்கும் உதவித் தொகைகளை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாகக் குறிப்பிட்ட இலக்குடன் பிரிம் (BR1M) போன்ற உதவித்தொகைகளைக் கூடுதலாக வழங்க முடிவெடுத்தவுடன், உடனடியாக நமக்கு எதிராகக்குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் பெருகி விட்டன” என்றும் நஜிப் தன்னை நோக்கி எழுப்பப்படும் விமர்சனங்களுக்கு மறைமுகமாகப் பதிலளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“எனவே, எனது மாண்புமிகு நண்பர்களே.. நீங்கள் பொறுமையுடன், நமது கொள்கைகளின் மீது நம்பிக்கையுடன் இருந்து, ஒருமனதாகக் கடவுளிடம் பிரச்சனைகளை விட்டு விட்டால், வெற்றியை நோக்கிய பாதையை நம்மால் கண்டறிய முடியும்” என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.