Home வாழ் நலம் ஆண்மை சக்தியை அழிக்கும் கோழி இறைச்சி – ஆய்வில் தகவல்!

ஆண்மை சக்தியை அழிக்கும் கோழி இறைச்சி – ஆய்வில் தகவல்!

1289
0
SHARE
Ad

chickendd-600மே 21 – கோழி வளர 12 விதமான ரசாயனப்  பொருட்களைக் கோழி சாப்பிடும் உணவோடு கலக்கிறார்கள். கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ‘ஆன்ட்டி பயாடிக்’ எனும் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.

இதனால் கோழிகளுக்கு வரும் நோய்கள், மனிதர்களுக்கும் தோன்றுகின்றன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கோழி இறைச்சி ஆண்களின் விந்தணுவில் உள்ள உயிரணுக்களை அழிக்கிறது.

குழந்தையின்மைக்கு முக்கியக் காரணம் கோழி இறைச்சி தான் என நியூயார்க் ஆய்வில் தெரியவந்துள்ளது. கோழிச் சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது.

#TamilSchoolmychoice

12 BROILER KOZHI-OKஇதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்புச் சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்தக் கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

கெட்ட கொழுப்பு அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.100-ல் 65 பேருக்குக் கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது.

பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெய்யை அதிக அளவில் பயன்படுத்துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

chickenசிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் புற்றுநோயும் உருவாகிறதாம். தொடர்ச்சியாகக் கோழி இறைச்சி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.

மேலும் இதை விரும்பிச் சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது. மஞ்சள் காமாலை, இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகள் வரக் காரணமாகிறது.