Home இந்தியா ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியில் இருந்து இன்று ராஜினாமா!

ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியில் இருந்து இன்று ராஜினாமா!

663
0
SHARE
Ad

Panneerselvamசென்னை, மே 21 – தமிழக முதல்வராக ஜெயலலிதா நாளை மறுநாள் பதவி ஏற்க உள்ளார். சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ்கள் பொதுத்துறையால் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

நாளைக் காலை 7 மணிக்கு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவராக ஒருமனதாகத்  தேர்ந்தெடுக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

பின்னர் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தை ஜெயலலிதா, கவர்னர் ரோசையாவிடம் வழங்குவார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவை முதலமைச்சராகப் பதவி ஏற்க வருமாறு ரோசையா முறைப்படி அழைப்பு விடுப்பார்.

ஜெயலலிதா பதவி ஏற்பதற்கு வசதியாக இன்று மாலையே ஓ.பன்னீர் செல்வம் கவர்னரைச் சந்தித்துத் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.