Home இந்தியா ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளுக்கு வரும் 25-ஆம் தேதிக்குள் தீர்ப்பு – உச்சநீதிமன்றம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளுக்கு வரும் 25-ஆம் தேதிக்குள் தீர்ப்பு – உச்சநீதிமன்றம்

820
0
SHARE
Ad

sathaasivamகோவை, ஏப்ரல் 19 – தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் நீதிபதிகளுக்கான கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கலந்து கொண்டார்.

இக்கருத்தரங்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) சதீஷ் அக்னிகோத்ரி, தமிழக மேற்கு மண்டலத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அளித்த பேட்டியில், ‘‘முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தொடர்பான வழக்கில் வரும் 25-ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும்‘‘ என்றார் நீதிபதி சதாசிவம்.