கோலாலம்பூர்,மே 20-மலேசியா கோலாலம்பூர் செந்தூல் பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி கோபால்.
மலேசியத் தனியார்த் தொலைக்காட்சியில் நிருபராகப் பணியாற்றி வரும் இவர், கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு, தான் தயாரித்த ‘தி கேம் சேஞ்சர்’என்னும் திரைப்படத்திற்குச் ‘சிறந்த மாணவர் செய்திப் படம்’என்ற விருதை வென்றுள்ளார்.
இவ்விருது மாணவர்கள் மற்றும் இளம் திரைப்படத் தயாரிப்பாளர்களைக் கௌரவிப்பதற்காக வழங்கப்படும் ஒரு சிறந்த விருதாகும்.
விருது அறிவிக்கப்பட்டதும் உற்சாக மிகுதியில் இந்திராணி, “இது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.இது என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி”என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு மலேசிய இளம் பெண்,அமெரிக்கச் சிறைக் கைதிகளின் வாழ்க்கை நிலையை மையமாக வைத்து இச்செய்திப் படம் தயாரித்திருப்பது கவனிக்கப்பட வேண்டிய விசயமாகும்.