Home நாடு கோல பெசுட் இடைத்தேர்தல் வரும் ஜூலை 24 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது!

கோல பெசுட் இடைத்தேர்தல் வரும் ஜூலை 24 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது!

519
0
SHARE
Ad

Spr-Election-INK-300x202கோலாலம்பூர், ஜூலை 5 – வரும் ஜூலை  24 ஆம் தேதி கோல பெசுட்  இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

அதோடு வேட்பு மனு தாக்கல் செய்யும் நாள் வரும் ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என்பதையும் அறிவித்துள்ளது.

மேலும் முன்கூட்டிய வாக்களிப்பு வரும் ஜூலை 20 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்த இடைத்தேர்தல் இஸ்லாமின் நோன்பு மாதமான ரமலான் மாதத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

கோல பெசுட் சட்டமன்ற உறுப்பினரான ரஹ்மான் மொஹ்தார் கடந்த ஜூன் 26 ஆம் தேதி நுரையீரல் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். இதனால் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.