Home 13வது பொதுத் தேர்தல் இரட்டைப் படையாக உள்ள தொகுதிகள் அனைத்தும் இவ்வருட இறுதிக்குள் மறுவரைவு செய்யப்படும் – தேர்தல் ஆணையம்

இரட்டைப் படையாக உள்ள தொகுதிகள் அனைத்தும் இவ்வருட இறுதிக்குள் மறுவரைவு செய்யப்படும் – தேர்தல் ஆணையம்

550
0
SHARE
Ad

Tan-Sri-Abdul-Aziz-Mohd-Yusof2ஈப்போ, ஜூலை 8 – பல மாநிலங்களில் இரட்டைப் படையாக உள்ள சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தொகுதிகள், இவ்வருட இறுதிக்குள், மறுவரைவு செய்யப்பட்டு ஒற்றைப் படையாக மாற்றப்படும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜீஸ் முகமட் யூசூப் தெரிவித்துள்ளார்.

அதோடு, தொகுதிகள் ஒற்றைப் படையாக மற்றுவதற்கு முன் அவை பொருந்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13 வது பொதுத்தேர்தலில் பணியாற்றிய தேர்தல் பணியாளர்களை பாராட்டும் விதமாக, நேற்று இரவு பேராக் மாநிலம் ஈப்போவில் இரவு விருந்து நடைபெற்றது.

#TamilSchoolmychoice

அதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அப்து அஜீஸ், “தொகுதிகள்  மறுவரைவு செய்யப்படுவதற்கு முன் சில திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. தொகுதிகளை ஒற்றைப்படையாக மாற்றுவது பெரிய காரியம் அல்ல,ஆனால் அவை அரசியலமைப்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அது தான் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,“நடந்து முடிந்த பொதுத்தேர்தலை ஆய்வு செய்த போது, தேர்தல் ஆணையத்தின் பலவீனங்களாக சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அவை தேர்தல் பணியாளர்களுக்கு நடைமுறைப் பயிற்சி மற்றும் தேர்தல் குறித்த பாடங்கள் கற்றுத்தரவேண்டும். அதோடு தொழில்நுட்பக் கோளாறுகளை சரி செய்ய வேண்டும்” என்று அப்துல் அஜீஸ் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜூலை 24 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலபெசுட் இடைத்தேர்தலில் இது போன்ற தவறுகள் நடக்காமல் தேர்தல் ஆணையம் தேவையான மாற்றங்களைச் செய்யும் என்றும் அப்துல் அஜீஸ் உறுதியளித்தார்.