Home நாடு சிலாங்கூர் அரசின் இலவச குடிநீர் இழப்பீட்டு வழக்கு மனு நிராகரிப்பு!

சிலாங்கூர் அரசின் இலவச குடிநீர் இழப்பீட்டு வழக்கு மனு நிராகரிப்பு!

780
0
SHARE
Ad

logo-syabasஷா ஆலாம், பிப்.5- சிலாங்கூர் மாநில அரசாங்கம், இலவச குடிநீர் தொடர்பான இழப்பீட்டு வழக்கை தள்ளுபடி செய்யும்படி கோரிய மனுவை நேற்று இங்குள்ள உயர்நீதி மன்றம் நிராகரித்தது.

இலவச குடிநீர் வழங்குவதாக அளித்த வாக்குறுதியை மீறியதற்கு இழப்பீடு தரக்கோரி பயனீட்டாளர்கள் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்வதற்கு சிலாங்கூர் மாநில அரசு உள்ளிட்ட மூன்று தரப்பினர் செய்த மனுவை இங்குள்ள உயர்நீதிமன்றம் நேற்று செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்தது.

கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இருபது கன மீட்டர் இலவச குடிநீரை வழங்குவதாக சிலாங்கூர் மாநில அரசு, மந்திரி புசார் டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராஹிம் மற்றும் குடிநீர் விநியோக நிறுவனமான ஷபாஸ் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டதாக சிலாங்கூரைச் சேர்ந்த  711 குடியிருப்பாளர்கள் இவர்களுக்கு எதிராக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வழக்கு தொடுத்தனர்.

#TamilSchoolmychoice

இலவச குடிநீர் வழங்கப்படாததற்கு இழப்பீடாக அம்மூன்று தரப்பினரும் 405, 270 ரிங்கிட் வழங்க வேண்டும் என்று கமாருடின் அண்ட் பார்ட்னர்ஸ் வழக்கறிஞர் நிறுவனம் மூலம் தொடுத்த வழக்கில் அவர்கள் கோரியிருந்தனர்.