புதுடெல்லி, ஜூலை 8– 2014ம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் குறித்து பாரதீய ஜனதா கட்சி கடந்த வியாழக்கிழமை டெல்லியில் ஆலோசனை நடத்தியது. தேர்தல் வியூகம் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
பொது தேர்தலுக்கான புதிய நிர்வாகிகள் நியமிப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற எடியூரப்பாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Comments