Home இந்தியா சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற மறைமலையடிகள் பெயரில் சபதம் ஏற்கிறேன்: கருணாநிதி

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற மறைமலையடிகள் பெயரில் சபதம் ஏற்கிறேன்: கருணாநிதி

498
0
SHARE
Ad

நாகப்பட்டினம், ஜூலை 8- சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற மறைமலையடிகள் பெயரில் சபதம் ஏற்கிறேன் என்று பேசினார் கருணாநிதி.

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதில், நாகப்பட்டினத்தில் இன்று திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, தலைமையேற்றுப் பேசினார் திமுக தலைவர் கருணாநிதி. நாகை அவுரித் திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர்,

karuna-cabinet-1805_630அண்ணா எழுச்சி நாள் கொண்டாடச் சொன்னது சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காகக்தான். அதன்படி இந்தத் திட்டத்தைக் கொண்டுவர தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம்.

#TamilSchoolmychoice

ஆனால், அண்ணா பெயரை கட்சியில் வைத்திருப்பவர்கள் இதனை எதிர்க்கிறார்கள். இது அண்ணாவுக்கு செய்யும் துரோகம். இந்தத் திட்டம் தேவை என்பதை மறைந்த நண்பர் எம்.ஜி.ஆரும் வலியுறுத்தியுள்ளார். எம்.ஜி.ஆர். சொன்னதையே அவர்கள் மறுக்கிறார்கள் என்றால் அவர் எம்.ஜி.ஆரையே மறுக்கிறார்கள் என்று பொருள்.

இந்தத் திட்டத்தை நான் தனிப்பட்ட ஒருவருக்காகவோ, கட்சிக்காகவோ நிறைவேற்றக் கோரிக்கை விடுக்கவில்லை. தமிழகத்தின் வருங்கால சந்ததி வளமாக இருக்க்க வேண்டும் என்பதாலேயே வலியுறுத்துகிறேன். பண்டைய காலங்களில் இருந்து வந்த அண்டை நாட்டு வணிகத் தொடர்பு இந்தத் திட்டத்தால் மீண்டும் கிடைக்கும் என்ற நோக்கத்தில்தான் இதை வலியுறுத்துகிறேன்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தொடர்ந்து போராடுவோம். என் வாழ்நாளில் சாதிக்க வேண்டிய முக்கியத் திட்டமாக இந்த சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று மறைந்த தனித்தமிழ் இயக்கத் தலைவர் மறைமலையடிகளார் பெயரில் சபதம் ஏற்கிறேன் என்றார் கருணாநிதி.