Home இந்தியா பாராளுமன்ற தேர்தல்: பா.ஜனதா மீண்டும் ஆலோசனை- அத்வானி, மோடி பங்கேற்பு

பாராளுமன்ற தேர்தல்: பா.ஜனதா மீண்டும் ஆலோசனை- அத்வானி, மோடி பங்கேற்பு

646
0
SHARE
Ad

புதுடெல்லி, ஜூலை 8– 2014ம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் குறித்து பாரதீய ஜனதா கட்சி கடந்த வியாழக்கிழமை டெல்லியில் ஆலோசனை நடத்தியது. தேர்தல் வியூகம் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Advani_Modiஇந்த நிலையில் டெல்லியில் பாரதீய ஜனதா இன்று மீண்டும் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை செய்தது. பாரதீய ஜனதா பாராளுமன்ற குழுவின் இந்த கூட்டத்தில் தேர்தல் பிரசார குழு தலைவர் நரேந்திரமோடி, மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பா.ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பொது தேர்தலுக்கான புதிய நிர்வாகிகள் நியமிப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற எடியூரப்பாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.