Home இந்தியா விஜயகாந்த்–பிரேமலதா நீதிமன்றத்தில் ஆஜராக ஆகஸ்டு 12-ந்தேதி வரை விலக்கு

விஜயகாந்த்–பிரேமலதா நீதிமன்றத்தில் ஆஜராக ஆகஸ்டு 12-ந்தேதி வரை விலக்கு

859
0
SHARE
Ad

சென்னை, ஜூலை 8– திருப்பூரில் கடந்த மே மாதம் 12–ந்தேதி தே.மு.தி.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் விஜயகாந்த், பிரேமலதா பங்கேற்று தமிழக அரசையும், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்கள்.

Tamil-Daily-News_17586481572இதைத் தொடர்ந்து விஜயகாந்த், பிரேமலதா உள்பட 5 தே.மு.தி.க.வினர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தமிழக அரசு சார்பில் திருப்பூர்  நீதிமன்றத்தில்  தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 2–ந்தேதி விசாரணைக்கு வந்த போது பிரேமலதா நீதிமன்றத்தில்  ஆஜரானார். விஜயகாந்த் ஆஜராக வில்லை.

#TamilSchoolmychoice

தங்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர அரசு வக்கீலுக்கு அதிகாரம் வழங்கும் குற்றவியல் நடைமுறை சட்டம் 199(4) அரசிலமைப்பு சாசனத்திற்கு எதிரானது. எனவே இந்த பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று விஜயகாந்த், பிரேமலதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி தனபாலன், சண்முகம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை வருகிற ஆகஸ்டு மாதம் 12–ந்தேதி வரை தள்ளி வைத்தத்துடன், திருப்பூர் செசன்சு நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையில் விஜயகாந்த், பிரேமலதா ஆஜராக தேவையில்லை என்று கூறினார்.

மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் விஜயனும், அரசு தரப்பில் வக்கில்  ஜெனரல் சோமையாஜியும் வாதிட்டனர்.