Home நாடு ஜொகூர் மாநிலத்தில் 23 தமிழ்ப்பள்ளிகளுக்கு விடிவு

ஜொகூர் மாநிலத்தில் 23 தமிழ்ப்பள்ளிகளுக்கு விடிவு

876
0
SHARE
Ad

asokan-sliderஜொகூர்பாரு, பிப்.5- ஜொகூர் மாநிலத்திலுள்ள 70 தமிழ்ப்பள்ளிகளில் 23 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டுவிட்டது.

தொடர்ந்து, உலுத்திராம் முத்தியாராரினி, மெளண்ட் ஆஸ்டின், புக்கிட் சிறம்பாங் கூலாய் பெசார் கேளாங் பாத்தா, கேளாங் கூலாய் ஒயில் பால்ம், துன் டாக்டர் இஸ்மாயில், நாகப்பா, தெமியாங் ரென்சோங் போர்ட்ரோஸ், டேசா செமர்லாங் பாசிர் கூடாங், நொர்டனல், செளதர்ன் மலே, யொங் பெங், சி.இ.பி.நியோர், ஸ்ரீ பெலாங்கி, ஜாலான் தாஜோல், பெர்மாஸ் ஜெயா, துன் அமினா, மெங்கி போல் ஆகிய தமிழ்பள்ளிகளுக்கு புதிய நிலம் வழங்கப்பட்டு விட்ட நிலையில் இவற்றில் 90 சதவீதம் பள்ளிகளில் கட்டடங்கள் கட்டப்பட்டுவிட்டது.

தொடர்ந்து, நிலங்கள் பெற்ற மற்ற பள்ளிகளில் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கவிருப்பதாக ஜொகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் எம்.அசோகன் ( படம்) தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட 10 கோடி வெள்ளியிலிருந்து மேலும் பல பள்ளிகள் கட்டுவதற்காக ஜொகூர் மஇகா பரிந்துரைகள் சமர்ப்பித்துள்ளதாகவும் தெளிவுபடுத்திய அசோகன் தேசிய முன்னணி அரசாங்கம் வழி இதனை சாதிக்க முடிந்ததாகவும்  குறிப்பிட்டார்.