Home அரசியல் “எதிர்கட்சிகள் ஏதாவது ஒரு பிரச்சனையைக் கிளறிக் கொண்டே இருப்பார்கள்” – தெங்கு அட்னான் காட்டம்

“எதிர்கட்சிகள் ஏதாவது ஒரு பிரச்சனையைக் கிளறிக் கொண்டே இருப்பார்கள்” – தெங்கு அட்னான் காட்டம்

631
0
SHARE
Ad

Adnan Tengku Mansorகோலாலம்பூர், ஜூலை 10 – எதிர்கட்சியினர் நாட்டின் ‘மலம் கிண்டுபவர்கள்’. அவர்கள் ஏதாவது ஒரு விவகாரத்தை கிளறி குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள் என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் மன்ஸோர் கூறியுள்ளார்.

இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில், தேச நிந்தனைச் சட்டம் ரத்து செய்வது குறித்த அவரது நிலைப்பாடு என்னவென்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, மேற்கண்டவாறு அட்னான் பதிலளித்துள்ளார்.

இருப்பினும், தேச நிந்தனைச் சட்டம் ரத்து செய்வது  பற்றி கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

#TamilSchoolmychoice

“என்னுடைய பதில் என்ன தெரியுமா? என்று கூறியதோடு தனது பேச்சை நிறுத்திக்கொண்டார்.

இதனிடையே, அனைத்துலக வெளிப்படை மலேசிய அமைப்பு (Transparency International Malaysia) வெளியிட்டுள்ள ஊழல் கண்ணோட்ட அட்டவணை (Corruption perception index) குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அட்னான், “மனிதர்களில் வாங்குபவர்களும் உண்டு, கொடுப்பவர்களும் உண்டு. கொடுப்பவர்கள் முதலில் நிறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும், காவல்துறை மட்டும் தான் அதிக ஊழல் செய்பவர்கள் என்று கூறுவது பாரபட்சமானது என்று குறிப்பிட்ட அட்னான், அமலாக்க அதிகாரிகளும் அதில் அடங்குவர் என்று தெரிவித்துள்ளார்.