Home அரசியல் அரசாங்கம் ஃபிட்ச் அறிக்கையை கவனத்தில் கொள்ளும் – நஜிப் உறுதி

அரசாங்கம் ஃபிட்ச் அறிக்கையை கவனத்தில் கொள்ளும் – நஜிப் உறுதி

438
0
SHARE
Ad

najib-razak-newகோலாலம்பூர், ஆகஸ்ட் 1 – மலேசிய பொருளாதாரம் குறித்து ஃ பிட்ச் மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள எதிர்மறை  அறிக்கை  தற்காலிகமானது என்றும், வரும் 2014 ஆம் ஆண்டு நாட்டின் வரவு செலவு திட்டத்தில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது தாங்கள் நாட்டின் பல்வேறு பொருளாதாரக் கொள்கைகளை ஆராய்ந்து வருவதாகவும், நாட்டின் நிதி நிலையை வலுப்படுத்த வேண்டிய சூழ்நிலையைத் தாங்கள் உணர்வதாகவும் நஜிப் கூறியுள்ளார்.

நாட்டின் நிதிப் பற்றாக்குறையை குறைப்பதற்கான அரசாங்க நடவடிக்கைகளில் முன்னேற்றம் இல்லாததால், மலேசியாவின் எதிர்கால பொருளாதார நிலை குறித்து ஃபிட்ச் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

அதோடு, கடந்த 2012 ஆம் ஆண்டு இறுதியில், அரசாங்கக் கடன் அளவுகள் 53.3 விழுக்காடாக இருந்தது குறித்தும் ஃ பிட்ச் அச்சம் தெரிவித்ததுள்ளது.

இந்நிலையில், வரும் 2013 ஆம் ஆண்டு தொடங்கி 2014 ஆம் ஆண்டு வரை நாட்டின் பொருளாதாரம் உயரும் என்று நஜிப் உறுதியளித்துள்ளார்.