Home அரசியல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் தே.மு முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் போல் சிந்திக்கிறது –...

பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் தே.மு முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் போல் சிந்திக்கிறது – அன்வார் கருத்து

486
0
SHARE
Ad

anwar feature

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – நாட்டின் பாதுகாப்பு பிரச்சனைகளைக் கையாள்வதில் தேசிய முன்னணி அரசாங்கம் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் எண்ணங்களைப் போலவே சிந்திக்கிறது என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

அதிகரித்து வரும் குற்றச்செயல்களை ஒடுக்குவதற்கு கடுமையான சட்டங்களை இயற்றுவதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வகையில் சிந்திக்கத் தெரியவில்லை என்றும் அன்வார் இன்று பிகேஆர் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

அவசரகால சட்டம் இல்லாததால் தான் தற்போது நாட்டில் 2 லட்சத்து 60 ஆயிரம் குற்றவாளிகள் சுதந்திரமாக உலவுகிறார்கள் என்று உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடியின் அறிக்கை குறித்து கருத்துரைத்த அன்வார்,“இது அப்படியே புஷ்ஷின் சிந்தனை. இதனால் பல அப்பாவி மக்கள் பாதிப்படைவார்கள்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “ஒருவன் கொலை செய்தால் மரண தண்டனை. போதை மருந்து கடத்தினாலும் மரண தண்டனை. இதை விட கடுமையான சட்டங்கள் என்ன வேண்டும்? எந்த ஒரு விசாரணையுமின்றி சந்தேகப்படும் நபர்களை தடுப்புக்காவலில் வைக்க வேண்டும் இது தான் அவர்களுக்கு வேண்டும்” என்று அன்வார் தெரிவித்துள்ளார்.

“இது பாதுகாப்பான சட்டம் என்று அவர்கள் கூறுகிறார்கள். அடுத்தவர் பிள்ளை என்றால் சரி என்கிறார்கள். அதே போல் தன் பிள்ளைக்கு வருவதென்றால்?” என்றும் அன்வார் கேள்வி எழுப்பியுள்ளார்.

“நாட்டில் நடக்கும் துப்பாக்கி சூடுகளும், கொலைகளும் நீண்ட காலமாக நடந்து வருகின்றன.அவசரகால சட்டமும், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டமும் அமலில் இருந்தே போதே இது போன்ற குற்றங்கள் நடைபெற்றன” என்று அன்வார் தெரிவித்துள்ளார்.