Home 13வது பொதுத் தேர்தல் “தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் சட்ட வழிமுறைகளை பக்காத்தான் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தவில்லை” – அன்வார்

“தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் சட்ட வழிமுறைகளை பக்காத்தான் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தவில்லை” – அன்வார்

463
0
SHARE
Ad

anwar-cloneகோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – நடந்து முடிந்த 13 வது பொதுத்தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் அனைத்து சட்டப்பூர்வ வழிகளையும் பக்காத்தான் இன்னும் பயன்படுத்தவில்லை என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

இது குறித்து அன்வார் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “அழியா மை தொடர்பான மேலும் சில விண்ணப்பங்கள் அடுத்த மாதம் விசாரணைக்கு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை தாக்கல் செய்யப்பட்டிருந்த தேர்தல் மனுக்களில் பல, நீதிமன்றங்களினால் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அன்வார், “கிளந்தான் மாநில கெத்தெரே தொகுதி தேர்தல் மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு காரணம் விண்ணப்பதாரர் நேரில் ஆஜராகவில்லை. நானும் பல்வேறு வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு சென்று கொண்டிருப்பதால், என்னால் தனிப்பட்ட முறையில் அவர்களுடன் செல்ல முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பக்காத்தானின் அனைத்து தேர்தல் மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்வது வருத்தத்திற்குரியது என்றும் அன்வார் கூறியுள்ளார்.

மேலும், எகிப்து, தாய்லாந்தில் நடப்பது போல் பிரச்சனைகளை பெரிதாக்க தாங்கள் விரும்பவில்லை என்றும், அதன் காரணமாகத் தான் நீதிமன்றங்களைத் தாங்கள் அணுகியதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.