மேலும், பௌத்தர்கள் தங்களது சமய கடமைகளை நிறைவேற்றும் போது, மற்றவர்களுடைய சமய உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று தலைமை பிக்கு கே ஸ்ரீ தம்மரத்னா நாயக்கே மஹா தேரா கூறியுள்ளார்.
“புத்த பிரானின் கோட்பாடுகளை பௌத்தர்கள் எல்லா நேரத்திலும் கடை பிடிக்க வேண்டும். அந்த கோட்பாடுகளின் மீது நம்பிக்கையும் வைத்திருக்க வேண்டும். ஒருவர் தனது மகிழ்ச்சியை அடுத்தவரின் துன்பத்திலிருந்து பெறுவது கூடாது” என்று பிக்கு தெரிவித்துள்ளார்.