Home இந்தியா 3 மாவட்ட நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள்: விஜயகாந்த் ஆஜராக விலக்கு- உயர்நீதிமன்றம் உத்தரவு

3 மாவட்ட நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள்: விஜயகாந்த் ஆஜராக விலக்கு- உயர்நீதிமன்றம் உத்தரவு

604
0
SHARE
Ad

சென்னை, ஆக. 13– தே.மு.தி.க. தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த், கடந்த 6.8.2012 அன்று திருநெல்வேலி பொதுக்கூட்டத்திலும், 8.8.2012 அன்று சிவகங்கை பொதுக்கூட்டத்திலும், 29.8.2012 அன்று திருவள்ளூர் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசும் போது, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்து அவதூறாக பேசி இருந்தார்.

vijaykanth170908_02இது பற்றி 3 மாவட்ட நீதிமன்றங்களிலும் ஜெயலலிதா சார்பில் அரசு வக்கீல் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதில் வழக்கு விசாரணைக்கு விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று 3 மாவட்ட நீதிமன்றங்களும் உத்தரவு பிறப்பித்தது.

#TamilSchoolmychoice

மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று விஜயகாந்த் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் சார்பில் வி.சி.பாலாஜி ஆஜரானார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற  நீதிபதிகள் தனபாலன், செல்வம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், 3 வழக்குகளில் விஜயகாந்த் மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டனர்.

இதன் மீது 2 வாரத்தில் பதில் அளிக்கவும் அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.