Home நாடு ஜோகூர் சுராவ் சர்ச்சை: பௌத்தர்களின் செயலுக்காக மன்னிப்பு கேட்டார் தலைமை பிக்கு!

ஜோகூர் சுராவ் சர்ச்சை: பௌத்தர்களின் செயலுக்காக மன்னிப்பு கேட்டார் தலைமை பிக்கு!

639
0
SHARE
Ad

K-Sri-Dhammaratana-300x218ஜோகூர், ஆகஸ்ட் 13 –  ஜோகூர் மாநிலம் கோத்தா திங்கியில் உள்ள ஒரு இஸ்லாமியர் தொழுகை நடத்தும் அறையில், சிங்கப்பூரைச் சேர்ந்த பௌத்தர்கள் குழு ஒன்று தியானம் செய்ததால் கடும் சர்ச்சை வெடித்திருக்கும் நிலையில், அவர்களின் செயலுக்கு பௌத்த மஹா விஹாரா ஆலயத்தின் தலைமை பிக்கு, தான் அனைத்து இஸ்லாமியர்களிடமும் மன்னிப்பு கேட்பதாகக் கூறியுள்ளார்.

மேலும், பௌத்தர்கள் தங்களது சமய கடமைகளை நிறைவேற்றும் போது, மற்றவர்களுடைய சமய உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று தலைமை பிக்கு கே ஸ்ரீ தம்மரத்னா நாயக்கே மஹா தேரா கூறியுள்ளார்.

“புத்த பிரானின் கோட்பாடுகளை பௌத்தர்கள் எல்லா நேரத்திலும் கடை பிடிக்க வேண்டும். அந்த கோட்பாடுகளின் மீது நம்பிக்கையும் வைத்திருக்க வேண்டும். ஒருவர் தனது மகிழ்ச்சியை அடுத்தவரின் துன்பத்திலிருந்து பெறுவது கூடாது” என்று பிக்கு தெரிவித்துள்ளார்.