கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – உலகத் தமிழ் தகவல், தொழில் நுட்ப மன்றம் (‘உத்தமம்’) அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற 12 ஆம் உலகத்தமிழ் இணைய மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த வாரம் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
இம்மாநாட்டில் உலகில் பல நாடுகளில் இருந்தும் தமிழ் அறிஞர்கள், கணினி, இணைய தொழிநுட்ப வல்லுநர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இது தவிர கையடக்கக் கருவிகளில் தமிழைப் பயன்படுத்துவது குறித்த கண்காட்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டின் நிறைவு நாளான கடந்த சனிக்கிழமை, நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் கலந்து கொண்டு நிறைவுரையாற்றினார்.
மேலும், கல்வித்துறை துணையமைச்சர் கமலநாதன், பேராக் சட்டமன்ற அவைத்தலைவர் டத்தோ எஸ்.கே தேவமணி, தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்க தலைமைச் செயல் அதிகாரி டத்தோ சகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இம்மாட்டில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் சிலர் நம் செல்லியலுக்கு அளித்த நேர்காணலை கீழ்க்காணும் இணையத் தொடர்பு வழிக் காணலாம்.
– பீனிக்ஸ்தாசன்