Home நாடு 12 வது உலகத்தமிழ் இணைய மாநாடு: இணையத்தில் தமிழ் என்பது ‘பேர்த் ஆவ் நியூ டான்’...

12 வது உலகத்தமிழ் இணைய மாநாடு: இணையத்தில் தமிழ் என்பது ‘பேர்த் ஆவ் நியூ டான்’ டத்தோ சகாதேவன் கருத்து

732
0
SHARE
Ad

datosahaகோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – உலகத் தமிழ் தகவல், தொழில் நுட்ப மன்றம் (‘உத்தமம்’) அமைப்பின் ஏற்பாட்டில்  கோலாலம்பூர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 12 ஆம் உலகத்தமிழ் இணைய மாநாட்டு நிறைவு விழாவில், தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்க தலைமைச் செயல் அதிகாரி டத்தோ சகாதேவனும் கலந்து கொண்டார்.

இவ்விழாவில் கலந்து கொண்ட பின்னர், 12 வது உலகத் தமிழ் இணைய மாநாடு குறித்து செல்லியலுக்கு அளித்த பிரத்யேக நேர்காணல் பின்வருமாறு:-

“உலகத் தமிழ் இணைய மாநாடு  தமிழ் மொழிக்கே ஒரு புதிய முயற்சியாக சொல்லலாம். இது ஒரு ‘பேர்த் ஆவ் நியூ டான்’  (The Birth Of New Dawn) என்று தான் தமிழ் மொழியை சொல்ல வேண்டும்”

#TamilSchoolmychoice

“இந்த நவீன உலகத்தில், அடுத்து முழு அவதாரம் மின்னியல் தான்.இந்த மின்னியலில் தமிழை இணைக்க அரும்பாடுபட்டு  வருகின்றனர்.அதற்கு இந்த மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அதேநேரத்தில் தமிழ் மொழியை கையடக்கக் கருவிகளில் கொண்டு சேர்த்த முத்து நெடுமாறன் அவர்களுக்கும் எனது நன்றிகள்” இவ்வாறு டத்தோ சகாதேவன் கூறினார்.

-பீனிக்ஸ்தாசன்