இவ்விழாவில் கலந்து கொண்ட பின்னர், 12 வது உலகத் தமிழ் இணைய மாநாடு குறித்து செல்லியலுக்கு அளித்த பிரத்யேக நேர்காணல் பின்வருமாறு:-
“தமிழ் இணைய மாநாட்டில் பல முனைவேந்தர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். இந்நிகழ்வு மலேசியாவில் நடப்பது மகத்தான புகழைத் தந்துள்ளது. தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்களிடையே கற்றல் கற்ப்பித்தல் போன்ற முறைகளில் கணினியையும், கையடக்கக் கருவிகளையும் பயன்படுத்துவது குறித்து சிந்தனை பகிர்ந்து கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் பல ஆசிரியர்கள் இங்கே வந்து தங்களது கருத்துக்களைச் சொன்னார்கள்”
“நான் என்ன நினைக்கிறேன் என்றால், பல்கலைக்கழகங்களில் தமிழ் கணினி பிரிவுகளை உருவாக்கி, கணினி மூலமாக கற்றல் கற்பித்தலை எப்படி வலுப்படுத்துவது, இணையம் மூலமாக தமிழைப் பயன்படுத்துவது, அதன்மூலமாக சமூகத்தோடு எப்படி தொடர்பு கொள்வது போன்றவை கற்பிக்கப் படவேண்டும்” இவ்வாறு தேவமணி தெரிவித்துள்ளார்.
தேவமணியின் முழு நேர்காணலை காண கீழ்காணும் காணொளியைப் பயன்படுத்தவும்
– பீனிக்ஸ்தாசன்