Home நாடு ஜோகூர் பாருவில் தமிழ் இணையக் கருத்தரங்கு

ஜோகூர் பாருவில் தமிழ் இணையக் கருத்தரங்கு

962
0
SHARE
Ad

muthu-nedumaranகோலாலம்பூர், செப். 18- அண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்ற 12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாட்டின் தொடர் நடவடிக்கையாக ஜொகூர் பாருவில் தமிழ் இணைய கருத்தரங்கு ஒன்று நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 21.9.2013 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ஸ்கூடாய், தாமன் யூனிவர்சிட்டியில் அமைந்துள்ள மலேசியத் தொழில்நுற்பப் பல்கலைக்கழக இணைக் கட்டடமான கட்டடத்தில் இக்கருத்தரங்கு நடைபெறும்.

இக்கருத்தரங்கை, மலேசிய உத்தமம் நல்லாதரவிலும் ஜோகூர் மாநில தகவல் அறிதிறன் ஒருங்கிணைப்பு இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

#TamilSchoolmychoice

infitt2உத்தமம் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் கணினி வல்லுநருமான முத்து நெடுமாறன், முகிலன் முருகன், மேக வர்ணன், தனேஸ் பாலகிருஷ்ணன், வாசுதேவன் லட்சுமணன், சிங்கப்பூர் குணசேகரன்  சின்னையா ஆகியோர் இக்கருத்தரங்கில் கட்டுரை படைக்கவுள்ளனர்.

உலகத் தமிழ் இணைய மாநாட்டில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு என்பதால் ஆசிரியர்கள், கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், ஆர்வமுள்ள பொதுமக்கள்  அனைவரும் இக்கருத்தரங்கில் கலந்து பயன்பெறுமாறு அனபுடன் அழக்கப்படுகின்றனர்.

வருகையாளர்களுக்கு காலை, மதிய, மாலை உணவு, கோப்பு, கருத்தரங்கு மலர், நற்சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.

மேல் விவரங்களுக்கு 019-7211065, 013-7689379, மற்றும் 012- 7116058 ஆகிய எண்களின் வழி தொடர்பு கொள்ளலாம்.