Home கலை உலகம் ‘மெட்ராஸ் கபே’ படத்தை மும்பையில் திரையிட பாரதீய ஜனதா எதிர்ப்பு

‘மெட்ராஸ் கபே’ படத்தை மும்பையில் திரையிட பாரதீய ஜனதா எதிர்ப்பு

648
0
SHARE
Ad

மும்பை, ஆக. 22- விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் ‘மெட்ராஸ் கபே’ திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று தமிழக கட்சிகளை சேர்ந்த சீமான், வைகோ உள்ளிட்டோர் தடை கோரியுள்ளனர்.

இந்நிலையில் தடைசெய்யப்பட்ட எல்.டி.டி.ஈ. இயக்கத்தை தவறாக சித்தரித்து காட்டப்பட்டுள்ள ‘மெட்ராஸ் கபே’ திரைப்படத்தை மும்பையில் வெளியிட மும்பை பாராதீய ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

madras-cafeஇதுகுறித்து மும்பை பாரதீய ஜனதா தலைவர் அஷிஷ் ஷெலார் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

ஜான் ஆபிரகாம் கதாநாயகனாக நடித்துள்ள ‘மெட்ராஸ் கபே’ திரைப்படத்தில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை தீவிரவாதியாக சித்தரித்து காட்டப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை இந்த படம் காட்டுகிறது. மேலும் தீவிரவாத செயல்களுக்கு தமிழ் அமைப்புகள் உதவியதாக காட்டப்படுகிறது.

madras-cafe-4a_0இந்த படத்தை இந்தியாவில் வெளியிட தடை கோரி தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றன. நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் ஏராளமான தமிழ் சகோதரர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் நிறைய அமைப்பினர் எங்களிடம் இந்த திரைப்படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து விளக்கியுள்ளனர்.

எனவே, ‘மெட்ராஸ் கபே’ திரைப்படம் மும்பையில் திரையிடப்படுமானால், சமுதாயத்தில் முரண்பாட்டை உருவாக்கும் என்று அறியப்படுகிறது.

மாநில அரசு இப்படம் திரையிடுவதை தடுக்காவிட்டால், திரையரங்குகளில்  பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.