Home இந்தியா காமன்வெல்த் மாநாடு விவகாரம்: தமிழகம் முழுவதும் 24-ம் தேதி போராட்டம் நடத்துகிறது பா.ஜனதா

காமன்வெல்த் மாநாடு விவகாரம்: தமிழகம் முழுவதும் 24-ம் தேதி போராட்டம் நடத்துகிறது பா.ஜனதா

560
0
SHARE
Ad

சென்னை, ஆக. 22-தமிழக பா.ஜனதா தலைவர் பொன் ராதாகிருஷ்ணன வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வருகிற நவம்பர் மாதம் இலங்கையில் நடக்கவுள்ள “காமன்வெல்த்” உறுப்பு நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பாரதப்பிரதமரை நேரில் அழைத்திட இலங்கை வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்து சென்றுள்ளார்.

“காமன்வெல்த்” உறுப்பு நாடுகளின் மாநாட்டில் பாரதப் பிரதமர் கலந்து கொள்ளக்கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

bjp-flag-_newஇச்சமயத்தில் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல தமிழர்களை தீவிரவாதிகள் போல கொச்சைப்படுத்தும் விதத்திலும் சித்தரித்துள்ள “மெட்ராஸ் கபே” என்கிற இந்தி திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நாளை மறுநாள் (23.08.2013) திரையிடப்படவுள்ளது.

இலங்கை வாழ் தமிழர்களின் இன்னல்களை, அவர்கள் படும் துயரங்களைப் பற்றிய உண்மை விபரங்களை அறியாதவர்கள், இலங்கையை ஆதரிப்பது போலவும், தமிழர்களை தீவிரவாதிகள் போல சித்தரித்தும் படம் எடுத்து வெளியிடுவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடனும் மத்திய காங்கிரஸ் அரசின் ஆசியுடனும் தான் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்ற கருத்திற்கு காங்கிரஸ் கட்சி பதில் அளித்தாக வேண்டும். இப்படம் திரையிடப்பட்டால் வேண்டாத விபரீத விளைவுகளை தோற்றுவிக்கும் என்று கருதப்படுகிறது. எனவே இத்திரைப்படத்தை எக்காரணம் கொண்டும் இந்தியாவில் எப்பகுதியிலும் திரையிடக்கூடாது என்று பாரதிய ஜனதா கட்சி கேட்டுக் கொள்கிறது.

காமன்வெல்த் உறுப்பு நாடுகள் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்று இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும், அதை மீறி நடைபெற்றால் இந்திய தரப்பிலிருந்து எவரும் அம்மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்றும், தேவைப்பட்டால் இலங்கை அதிபரின் தலைமை காமன்வெல்த் அமைப்பில் தொடரும் வரை இந்தியா அவ்வமைப்பில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் இலங்கை அரசு இலங்கை தமிழர்களுக்கு செய்த துரோகத்தை அங்கீகரித்ததாகும் என தமிழக பாரதிய ஜனதா கட்சி கருதுகிறது. எனவே இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமரோ, பிரதிநிதியோ எவரும் கலந்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி வரும் 24ம் தேதி (24.08.2013) அன்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.