Home வணிகம்/தொழில் நுட்பம் நீரா ராடியா டேப் விவகாரம்: ரத்தன் டாடா நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்

நீரா ராடியா டேப் விவகாரம்: ரத்தன் டாடா நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்

626
0
SHARE
Ad

புதுடெல்லி, ஆக. 22- அரசியல் தரகர் நீரா ராடியாவுடன் தொழில் அதிபர் ரத்தன் டாடா தொலைபேசியில் பேசிய உரையாடல் விவரம் கடந்த 2010ம் ஆண்டு சில பத்திரிகைகள் மற்றும் இணையதளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Tata_Power_Rata3451அடுத்தவர் சுதந்திரத்தை மீறி, இந்த விவரங்களை பத்திரிகைகளுக்கு கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில்  ரத்தன் டாடா மனு தாக்கல் செய்தார்.

உரையாடல் எப்படி கசிந்தது? என்பது பற்றி அரசு அளித்த அறிக்கையின் நகலையும் டாடா கேட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாணையை பார்வையிடுவதற்காக ரத்தன் டாடா நேற்று உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

காலை 11 மணியளவில் தனது வழக்கறிஞர் மற்றும் சில நிர்வாகிகளுடன் வந்த அவர் சாட்சியம் அளித்த பின்னர் புறப்பட்டுச் சென்றார்.