மேலும் நியூயார்க் நகர காவல்துறையுடன் மலேசியாவை ஒப்பிட்டு கருத்துக் கூறிய அவர், அங்கு 35 குடிமகன்களுக்கு தலா 1 காவல்துறை அதிகாரி இருப்பதாகவும், எல்லா இடங்களிலும் உயர் தெளிவுத்திறன் ஒளிபடக் கருவி (High Defintion camera) பொருத்தப்பட்டிருப்பதாகவும் சாஹிட் தெரிவித்துள்ளார்.
ஆனால் மலேசியாவில் 750 குடிமகன்களுக்கு 1 காவல்துறை வீதம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும், ஆங்காங்கே பொருத்தப்பட்டிருக்கும் ஒளிப்படக் கருவிகளும் தரம் இல்லாதவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பண்டார் சன்வேயில் நடைபெற்ற குற்றத்தடுப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சாஹிட் தனது உரையில் “நிறைய மாற்றங்கள் இந்நாட்டில் செய்ய வேண்டியது உள்ளது. ஆனால் நாம் அதற்கு தயாராக இல்லை. இது தான் இந்த நாட்டில் நடக்கிறது. இந்த இரண்டு சட்டங்களும் இல்லாத்தால் காவல்துறை பல் இல்லாமல் பலவீனமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.