Home இந்தியா கர்நாடக மாநில நாடாளுமன்றத்தின் முதல் நடிகையாக ரம்யா வெற்றி!

கர்நாடக மாநில நாடாளுமன்றத்தின் முதல் நடிகையாக ரம்யா வெற்றி!

738
0
SHARE
Ad

Ramya-Sliderஆகஸ்ட் 25 – தமிழில் வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுடன் நடித்ததோடு மேலும் சில படங்களிலும் நடித்த கர்நாடக திரையுலகின் பிரபல நடிகை ரம்யா, மாண்டியா நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்றுள்ளார்.

#TamilSchoolmychoice

இதன் மூலம் கர்நாடக நாடாளுமன்றத்தின் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் பெண் நடி‌கையாக ரம்யாதிகழ்கின்றார்.

கர்நாடகாவின் தங்கமங்கை என்று அழைக்கப்படும் ரம்யா சில வெற்றிப்படங்‌களை அளித்துள்ளார்.தமிழிலும் அவர் நடித்துள்ளார்.

1982-ம் ஆண்டு பிறந்த அவர் கடந்த 2003-ம்ஆண்டில் அபி என்ற கன்னட திரைப்படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து 2011-ல்இளைஞர் காங்கிரஸ் கட்சியி்ல் சேர்ந்த அவர் கடந்த சட்டசபை தேர்தலில்காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொண்டார்.

தற்போது மாண்டியாதொகுதி வெற்றி மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.அதே போல்மாண்டியா மாவட்டத்தில் புகழ் பெற்றவரும், பிரபல கர்நாடக திரைப்பட கதாநாயகனுமான  எம்.எச்அம்பரீஷ்க்குரம்யாவின் வெற்றியில் முக்கிய பங்கு உண்டு.

அம்பரீஷ் மாண்டியா தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

தற்போது அம்பரீஷ்சித்தராமையாவின் அமைச்சரவையி்ல் வீட்டு வசதி வாரிய அமைச்சராக உள்ளார்.