Home நாடு வல்லினம் ‘கலை இலக்கிய விழா -5’ மிகச் சிறப்பாக நடைபெற்றது!

வல்லினம் ‘கலை இலக்கிய விழா -5’ மிகச் சிறப்பாக நடைபெற்றது!

622
0
SHARE
Ad

IMG_9312கோலாலம்பூர், செப்டம்பர் 16 – ‘வல்லினம்’ குழுவினரால் ஒவ்வொரு ஆண்டும் ‘கலை இலக்கிய விழா’ வெற்றிகரமாக நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி இவ்வாண்டிற்கான ‘கலை இலக்கிய விழா – 5’ நேற்று கோலாலம்பூரில் உள்ள கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் மிகச் சிறப்பான வகையில் நடைபெற்றது.

சுமார் மூன்று மணி நேரங்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் பேராசிரியர் அ.மார்க்ஸ், ம.சண்முகசிவா, சுவாமி பிரமானந்தா, அ.பாண்டியன் மற்றும் கா.ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில், ம.நவீனின் ‘விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு’ என்ற நாவல் தொடர்பான விமர்சன நூல், கே.பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்க்கனவு’ என்ற தேர்த்தெடுக்கப்பட்ட சிறுகதை தொகுப்பும், பூங்குழலில் வீரனின் ‘நிகழ்த்தலும் நிகழ்தல் நிமித்தமும்’ என்ற கவிதை தொகுப்பும் வெளியிடப்பட்டது.IMG_9316

#TamilSchoolmychoice

அத்துடன்,  ‘இலக்கியச் சந்திப்பு’ குழுவினரால் வெளியிடப்பட்ட ‘குவர்னிகா’ எனும் நூலும் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.