Home நாடு முன்னாள் மலேசிய கம்யூனிஸ்ட் தலைவர் சின் பெங் காலமானார்!

முன்னாள் மலேசிய கம்யூனிஸ்ட் தலைவர் சின் பெங் காலமானார்!

834
0
SHARE
Ad

articleschin_peng_600_396_100பேங்கோக், செப் 16 – முன்னாள் மலேசிய கம்யூனிஸ்ட் கட்சி தலைமைச் செயலாளர் சின் பெங், தாய்லாந்து தலைநகர் பெங்கோக்கிலுள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று காலமானார்.

பெங்கோக் போஸ்ட் நாளிதழ் படி, இன்று அதிகாலை மணி 6.20 மணியளவில் சின் பெங் வயது மூப்பு காரணமாக காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1989 ஆம் ஆண்டு மலேசியா – தாய்லாந்து இரு நாடுகளுக்கிடையே செய்யப்பட்ட ஹாட்யாய் ஒப்பந்தத்தின் படி,  கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் பலர் மலேசியாவிற்கு திரும்பினர். ஆனால் சின் பெங்கை மட்டும் மலேசியாவிற்குள் நுழைய புத்ரஜெயா தடை விதித்தது.

#TamilSchoolmychoice

அதனால் தனது வாழ்நாளில் பல வருடங்களை சின் பெங் தாய்லாந்திலேயே கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.