கோலாலம்பூர், செப் 24 – மலேசியா மற்றும் ஜப்பான் கூட்டுத்தயாரிப்பு நிறுவனமான ஆசிய எரிசக்தி முதலீட்டு நிறுவனம் (Asian Energy Investments Pte Ltd) தென் கிழக்கு ஆசியாவில் தூய எரிசக்தி செயற்திட்டங்களை அமைக்க 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை (320 மில்லியன் ரிங்கிட்) முதலீடு செய்துள்ளது.
நேற்று அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற தொடக்க விழாவில் கலந்து கொண்ட மலேசிய பிரதமர் நஜிப் துன் ரசாக் இந்த முதலீடு குறித்து அறிவித்தார்.
“இது போன்ற அறிவுசார்ந்த, கண்டுபிடிப்புகள் நிறைந்த பொருளாதார உருமாற்று திட்டங்கள் மலேசியாவை மற்ற வளர்ந்த நாடுகளின் தரவரிசைப் பட்டியலோடு சேர்ந்து கொள்ள உதவும் என்று நான் நம்புகிறேன்” என்று பிரதமர் நஜிப் கூறினார்.
இந்த புதிய திட்டங்களின் பணிகளை சிறிய, பெரிய காற்றாலை, சோலார் நிறுவனங்களுக்கு பிரித்து கொடுக்கும் பொறுப்பை மலேசிய நிதி மேலாண்மை நிறுவனமான புத்ரா எக்கோ வென்சர்ஸ் (Putra Eco Ventures Inc) கையாள்கிறது.
\