Home அரசியல் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலையிட வேண்டும் என நான் கூறவில்லை – டத்தோஸ்ரீ லியோ தியோங்...

டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலையிட வேண்டும் என நான் கூறவில்லை – டத்தோஸ்ரீ லியோ தியோங் லாய் திட்டவட்டம் !

557
0
SHARE
Ad

 

 liow-tiong-lai5-june7_400_267_100

கோலாலம்பூர், அக். 19- மசீசவின் பேராளர் மாநாட்டில் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலையிட வேண்டும் என தாம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுவதை அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ லியோ தியோங் லாய் திட்டவட்டமாக மறுத்தார்.

#TamilSchoolmychoice

“சிலர் தேசிய முன்னணியின் துணைத்தலைவரிடம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் கட்சியின் பேராளர் மாநாட்டில் தன் மீது தாக்கல் செய்யப்படவிருக்கும் கண்டன தீர்மானம் குறித்து முறையிட்டதாக” மசீசவின் தலைவர் டத்தோஸ்ரீ சுவா சோய் லேக் தமது அறிக்கையில் கூறியதைத் தொடர்ந்து  டத்தோஸ்ரீ லியோ தியோங் லாய் அதனை முற்றிலும் மறுத்தார்.

அண்மைக் காலமாக மசீசவில் பேராளர்களைக் குழப்பும் நோக்கில் ஒரு சிலர் கட்சியின் உள் கூட்டங்களிலும் குறுந்தகவல் மூலமாகவும் தாம் தான் துணைப்பிரதமரை கட்சியின் பேராளர் மாநாட்டில் தலையிடும்படி கேட்டுக்கொண்டதாக தம்மீது அவதூறு  பரப்புகின்றனர்.

இது ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும். எனது பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கில் என் மீது இவ்வாறான அவதூறுகளைப் பரப்புகின்றனர். நான் ஒரு போதும் துணைப்பிரதமரிடம் முறையிட்டது கிடையாது.  ம.சீ.ச.வால் கட்சியின் உள்விவகாரங்களை இதர கட்சிகளின் தலையீடு இன்றி தீர்வு காண முடியும் என அவர் கூறினார்.

துணைப்பிரதமரிடம் முறையிட்டவர் யார் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் தகவல் ஊடகங்கள் டத்தோஸ்ரீ சுவா சோய் லேக்கிடமோ அல்லது துணைப்பிரதமரிடமோ நேரிடையாக சென்று கேட்டுக்கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

பல்வேறு காரணங்கள் அடிப்படையில் மசீசவின் இருபது மத்திய செயலவை உறுப்பினர்கள் கட்சியின் பேராளர் மாநாட்டில் டத்தோஸ்ரீ லியோ தியோவ் லாய் மீது கண்டன தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு முன்மொழிந்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.