Home அரசியல் முக்ரிஸ் மகாதீரிடம் மலேசியன் இன்சைடர் செய்தி வலைத்தளம் மன்னிப்பு கோரியது

முக்ரிஸ் மகாதீரிடம் மலேசியன் இன்சைடர் செய்தி வலைத்தளம் மன்னிப்பு கோரியது

571
0
SHARE
Ad

 mukriz

கோலாலம்பூர், அக். 19- கெடா மாநில மந்திரி பெசார் டத்தோ முக்ரிஸ் மகாதீர் மீது அவதூறான வகையில் செய்தி வெளியிட்ட மலேசியன் இன்சைடர் செய்தி வலைத்தளம் அவரிடம் மன்னிப்பு கோரியதோடு அச்செய்தியை மீட்டுக்கொண்டது.

அம்னோ தேர்தலில் உதவி தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்காக டத்தோ முக்ரிஸ் மகாதீர் பண அரசியலில் ஈடுபடுவதாக அச்செய்தி வலைத்தளம் ஆங்கிலத்திலும் மலாய் மொழியிலும் இதற்கு முன்பு  செய்தி  வெளியிட்டிருந்தது. நேற்று காலை ஜெர்லூனில் நடைபெற்ற அம்னோ பேராளர் பொதுக்கூட்டத்திற்கு வருகை புரிந்த அவர் மலேசியன் இன்சைடர் செய்தி வலைத்தளத்திற்கு இன்று காலை மணி 10.00 வரையில் கால அவகாசம் வழங்குவதாகவும் தம்மிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும். இல்லையேல், அதன் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

#TamilSchoolmychoice

அவர் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அச்செய்தி வலைத்தளம் இன்று காலை 10.00 மணி அளவில் மன்னிப்பு கோரியதோடு அவ்விரண்டு செய்திகளையும் மீட்டுக்கொண்டதாக தனது வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.