இது குறித்து ஜோகூர் அரச நீதிமன்றத்தின் செயலாளர் டத்தோ அப்துல் ரஹீம் ரம்லி கூறுகையில், “ஹம்சானின் டத்தோ (Darjah Mahkota Johor Yang Amat Mulia Pangkat Kedua Datuk Paduka Mahkota Johor – D.P.M.J) பட்டத்தையும், Pingat Ibrahim Sultan Pangkat Kedua – PIS பட்டத்தையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று சுல்தான் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.
இனி ஹம்சான் ‘டத்தோ’ பட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்றும் அப்துல் ரஹீம் குறிப்பிட்டார்.
மாநில அரசியலமைப்பு 1895 மற்றும் உட்பிரிவு 13 உட்பிரிவு 7 (2) (F) ஆகிய சட்டப்பிரிவுகளின் படி, சுல்தான் இம்முடிவை எடுத்துள்ளதாக ஹம்சான் தெரிவித்தார்.
ஹம்சானுக்கு டத்தோ பட்டமும், பி.ஐ.எஸ் பட்டமும் கடந்த 2005 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பட்டம் திரும்பப்பெறப்பட்டதற்கான முழுமையான காரணம் இன்னும் தெரியவில்லை.