Home நாடு முன்னாள் பொருளாதாரப் பிரிவு இயக்குநரின் ‘டத்தோ’ பட்டம் பறிப்பு – ஜோகூர் சுல்தான் உத்தரவு

முன்னாள் பொருளாதாரப் பிரிவு இயக்குநரின் ‘டத்தோ’ பட்டம் பறிப்பு – ஜோகூர் சுல்தான் உத்தரவு

515
0
SHARE
Ad

5abc1de33d6fb35caefd24761a47fcb4_XLஜோகூர் பாரு, நவ 8 – ஜோகூர் மாநில முன்னாள் பொருளாதார திட்டமிடல் பிரிவு இயக்குனர் ஹம்சான் சரிங்கட்டின் “டத்தோ” பட்டத்தை ஜோகூர் சுல்தான் இன்று திரும்பப்பெற உத்தரவிட்டார்.

இது குறித்து ஜோகூர் அரச நீதிமன்றத்தின் செயலாளர் டத்தோ அப்துல் ரஹீம் ரம்லி கூறுகையில், “ஹம்சானின் டத்தோ (Darjah Mahkota Johor Yang Amat Mulia Pangkat Kedua Datuk Paduka Mahkota Johor – D.P.M.J) பட்டத்தையும், Pingat Ibrahim Sultan Pangkat Kedua – PIS பட்டத்தையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று சுல்தான் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.

இனி ஹம்சான் ‘டத்தோ’ பட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்றும் அப்துல் ரஹீம் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

மாநில அரசியலமைப்பு 1895 மற்றும் உட்பிரிவு 13 உட்பிரிவு 7 (2) (F) ஆகிய சட்டப்பிரிவுகளின் படி, சுல்தான் இம்முடிவை எடுத்துள்ளதாக ஹம்சான் தெரிவித்தார்.

ஹம்சானுக்கு டத்தோ பட்டமும், பி.ஐ.எஸ் பட்டமும் கடந்த 2005 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பட்டம் திரும்பப்பெறப்பட்டதற்கான முழுமையான காரணம் இன்னும் தெரியவில்லை.