Home அரசியல் உத்துசானுக்கு மட்டும் தனிச் சலுகை ஏன்? – துணை நிதியமைச்சருக்கு மசீச கேள்வி

உத்துசானுக்கு மட்டும் தனிச் சலுகை ஏன்? – துணை நிதியமைச்சருக்கு மசீச கேள்வி

579
0
SHARE
Ad

1-ganகோலாலம்பூர், நவ 11 – அம்னோவின் உத்துசான் மலேசியா நாளிதழுக்கு கூடுதல் விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட துணை நிதியமைச்சர் அகமட் மஸ்லானை மசீச கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

மசீச கட்சியின் உதவித் தலைவர் கான் பெங் சியு இன்று வெளியிட்ட அறிக்கையில், இவ்விவகாரத்தில் நிதியமைச்சர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றார் என்றும் தனியார் செய்தி நிறுவனங்களான உத்துசான் போன்றவற்றிற்கு அரசாங்கம் ஆதரவு கொடுப்பது கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

“சினார் ஹரியான், மெட்ரோ, காஸ்மோ, தி ஸ்டார், சின் சியூ டெய்லி, ஓரியண்டல் டெய்லி போன்ற செய்தி நிறுவனங்களும் ஊடக சந்தையில் போட்டி போட்டுக் கொண்டிருக்கையில் உத்துசானுக்கு மட்டும் அரசாங்க பணத்தை கொடுத்து விளம்பரங்கள் செய்ய எந்தக் காரணமும் இல்லை” என்று கான் பெங் சியு கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் அவ்வாறு  உத்துசானுக்கு மட்டும் தனி சலுகை காட்டுவது மற்ற ஊடகங்களின் போட்டிக்கும், திறமைக்கும் ஏற்படுத்தும் இழிவாகும் என்றும் கான் பெங் சாடியுள்ளார்.

கடந்த வார இறுதியில் கோம்பாக் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அகமட் மஸ்லான், நாட்டில் உச்ச நிலையில் இருக்கும் 35 அரசாங்கம் சார்ந்த நிறுவனங்களின் விளம்பரங்களுக்கான மொத்த நிதியில், 3.7 சதவிகிதம் தான் உத்துசானுக்கு போவதாகக் குறிப்பிட்டார்.