Home Featured நாடு சமரச முயற்சி தோல்வி: உத்துசான், டிவி3-க்கு எதிரான அன்வார் வழக்கு விசாரணைக்குச் செல்கிறது!

சமரச முயற்சி தோல்வி: உத்துசான், டிவி3-க்கு எதிரான அன்வார் வழக்கு விசாரணைக்குச் செல்கிறது!

736
0
SHARE
Ad

ANWAR IBRAHIM_INTERVIEWகோலாலம்பூர் – லகாட் டத்து ஊடுருவலில் தன்னை சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிட்டதற்காக உத்துசான் மலாயு பெர்ஹாட் நிறுவனம், அதன் தலைமை நிர்வாகி, டிவி3, மீடியா பிரைம் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைவர் சஹாருதின் லத்தீப் மற்றும் புல்லட் இன் உத்தாமா செய்தி ஆசிரியர் இங் பூங் செங் ஆகியோருக்கு எதிராக முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தொடுத்திருந்த அவதூறு வழக்கு இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் பார்வைக்கு வந்தது.

இதற்காக அன்வார், சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கிய அன்வார் தரப்பு தோல்வியில் முடிந்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

#TamilSchoolmychoice

இதனிடையே, நீதிமன்றத்தில் இருந்து அன்வார் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன் தனது நண்பர்களையும், ஆதரவாளர்களையும் நீதிமன்ற வளாகத்தில் அன்வார் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

அப்போது, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவாவைப் பார்த்து கிண்டலாகப் பேசிய அன்வார், “நன்றாக சாப்பிடுங்கள்.. ஏய்… தியான் நான் தான் சிறையில் இருக்கிறேன். உன் அளவுக்கு ஒல்லியாக இல்லை” என்று கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு தியான் சுவா உட்பட அங்கிருந்தவர்கள் சிரித்துள்ளனர்.