Home Featured கலையுலகம் கபாலினா கபாலி தான் – புதிய தோற்றத்தில் அசரடிக்கும் ரஜினிகாந்த்! 

கபாலினா கபாலி தான் – புதிய தோற்றத்தில் அசரடிக்கும் ரஜினிகாந்த்! 

623
0
SHARE
Ad

rajini1கோலாலம்பூர் – ‘அட்டக்கத்தி’ இயக்குனர் ரஞ்சித்தின் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினியின் தோற்றம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் பரபரப்புடன் இருந்து வந்த நிலையில், படக்குழு ரஜினியின் புதிய தோற்றத்தை வெளியிட்டுள்ளது.

rajini4வழக்கமான ரஜினியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, நிஜதோற்றத்தில் வெண்தாடியுடன் ரஜினி இருப்பது போல் வெளியாகி உள்ள புகைப்படங்கள் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. வயதான தோற்றம், இளமையான தோற்றம் என இரு பரிமாணங்களில் ரஜினி தோன்ற இருப்பதாக கபாலி வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

rajini3பாட்ஷாவிற்கு அடுத்ததாக ரஜினி நடித்த பல படங்கள் வெற்றி பெற்று இருந்தாலும், நிழல் உலக தாதாவாக அவர் மிரட்டிய பாட்ஷாவின் தாக்கம் இன்னும் ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டே இருக்கிறது.

#TamilSchoolmychoice

rajini2அதேபோன்றதொரு கதைக்கரு கபாலியில் இருப்பதால், இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்று கூறப்படுகிறது.