Home Featured நாடு தீபாவளிக்குப் பிறகு 1எம்டிபி பட்டாசு: அருள் கந்தாவுடன் விவாதத்தில் களமிறங்குகிறார் ரபிசி!

தீபாவளிக்குப் பிறகு 1எம்டிபி பட்டாசு: அருள் கந்தாவுடன் விவாதத்தில் களமிறங்குகிறார் ரபிசி!

827
0
SHARE
Ad

rafisiகோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரத்தில் அருள் கந்தாவுடன் விவாதிக்க டோனி புவாவுக்குப் பதிலாக பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லியை அனுப்ப முடிவெடுத்திருக்கிறது பக்காத்தான் ஹராப்பான்.

ஆர்டிஎம் தொலைக்காட்சி வழியாக நேரலையில் அந்த விவாதத்தை ஒளிபரப்பும் எண்ணத்தில் எந்த மாறுபாடும் இல்லை என்றும் எதிர்கட்சிக் கூட்டணி தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரான டத்தோஸ்ரீ டாக்டர் சாலே சையட் கெருவாக்குடன் விவாதித்து, ஆர்டிஎம்-ல் நேரலையாக ஒளிபரப்பத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என ஜசெக-வைச் சேர்ந்த ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“ஒருவேளை ஆர்டிஎம் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால், விருப்பப்படும் வேறு ஒரு ஊடகத்திற்குச் செல்வோம்” என்றும் ஆண்டனி லோக் கூறியுள்ளார்.

மேலும், இந்த வாரம் வெள்ளிக்கிழமை இந்த விவாதத்தை நடத்த இயலுமா? என்பது இன்னும் உறுதியாகாத நிலையில், தீபாவளிக்குப் பின்னர் சரியான நேரத்தில் இந்த விவாதம் நடக்கும் என்றும் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.