Home 13வது பொதுத் தேர்தல் ம.இ.கா தேர்தல்: வேட்புமனு வாபஸ் பெற இன்று இறுதி நாள்!

ம.இ.கா தேர்தல்: வேட்புமனு வாபஸ் பெற இன்று இறுதி நாள்!

542
0
SHARE
Ad

MIC-Logo-Sliderகோலாலம்பூர், நவ 19 – வரும் நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள ம.இ.கா தேர்தலில் உதவித் தலைவர் மற்றும் மத்திய செயலவை உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள், போட்டியிலிருந்து தங்கள் மனுவை வாபஸ் பெற இன்று தான் இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலைக்குள் போட்டியிலிருந்து விலக நினைப்பவர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம் என்றும் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலில், 3 உதவித்தலைவர் பதவிகளுக்கு 8 பேரும், 23 மத்திய செயலவை உறுப்பினர்களுக்கு 88 பேரும் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

3 தேசிய உதவித் தலைவர் பதவிக்கு நடப்பு உதவித் தலைவர்களான டத்தோ எம்.சரவணன், டத்தோஸ்ரீ எஸ்.கே தேவமணி ஆகியோருடன் ம.இ.கா பொருளாளர் ஜஸ்பால் சிங், ம.இ.கா தெசிய இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவர் டி.மோகன், முன்னாள் உதவித் தலைவர் டத்தோ எஸ்.சோதிநாதன், முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ எஸ்.கே விக்னேஸ்வரன், ஜேம்ஸ் செல்வராஜ், டத்தோ பாலகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதே போல், 23 மத்தியச் செயலவை உறுப்பினர் பதவிகளுக்கு 88 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில் பல புதுமுகங்களும் அடங்கும்.

இதனிடையே, தேசியத் துணைத்தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கலில், டாக்டர் எஸ்.சுப்ரமணியத்தை தவிர வேறு யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.