Home நாடு கால்களுக்கு வலிமை தரும் பயிற்சி

கால்களுக்கு வலிமை தரும் பயிற்சி

563
0
SHARE
Ad

5c6e8e83-14a7-4521-9c3c-45664944662e_S_secvpf

கோலாலம்பூர், நவம்பர் 19 – கால்களை வலுவாக்க பல பயிற்சிகள் உள்ளன. அவற்றில் சில பயிற்சிகளை தான் வீட்டில் செய்ய முடியும். அதில் இந்த பயிற்சி விரைவில் நல்ல பலன் தரக்கூடியது. ஆனால் ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்வது மிகவும் கடினமானது. நன்கு பழகிய பின்னர் செய்ய எளிதாக வரும். இப்போது இந்த பயிற்சி செய்முறையை பார்க்கலாம்.

1. முதலில் சுவற்றின் சாய்ந்த படி நேராக நிற்கவும். பின்னர் முதுகை சுவற்றில் மேல் வைத்து கால்களை முட்டி வரை மடக்கி நாற்காலியில் அமருவதை போல் அமரவும்.

#TamilSchoolmychoice

2. கைகள் இரண்டையும் மேல் நோக்கி நேராக தூக்கவும். இந்த நிலையில் வலது காலை மடக்கி இடது கால் தொடையின் மீது வைக்கவும்(படத்தில் உள்ளபடி). இந்த நிலையில் 10 விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.

3. பின்னர் கால்களை மாற்றி இடது பக்கம் இதே போல் செய்யவும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும்.  ஆரம்பத்தில் 10 முறை செய்தால் போதுமானது. இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் கால்கள் நன்கு வலிமையடையும். மேலும் அழகான கால்களை பெறலாம்.