பிரான்ஸ், டிசம்பர் 4- இலங்கையில் நடைப்பெற்ற உள்நாட்டு போரின் போது நிவாரண பணிக்கு சென்ற பிரான்ஸ் நாட்டு தொண்டு நிறுவன உழியர்கள் 17 பேர் சிங்கள ராணுவத்தால் கொடூரமாக சுட்டு கொல்லப்பட்டது அம்பலமாகியுள்ளது. இலங்கையில் விடுதலை புலிகளுடன் நடந்த போரில் அப்பாவி தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. உலகையே உலுக்கிய இந்த போர் குற்றம் குறித்து சர்வேதச விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு நாடுகளும் குரல் எழுப்பி வருகின்றன.
பிரிட்டன் பிரதமர் கேமரூனும் இலங்கையில் நடைப்பெற்ற மனித உரிமை மீறல் குறித்து ஐநா மூலம் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் இலங்கையில் நடைப்பெற்ற உள்நாட்டு போரின் போது கடந்த 2006ம் ஆண்டு பிரான்சை சேர்ந்த ஏசிஎப் தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் நிவாரண பணிகளுக்காக இலங்கை சென்றனர் அவர்கள் பாதிக்கப்பட்ட முதூரில் உதவி பணியில் ஈடுபட்டு இருந்த போது அங்கு வந்த இலங்கை ராணுவம் அவர்களை பிடித்து சென்றதாகவும் அவர்களை முட்டி போட வைத்து ஒவ்வொருவராக சுட்டு கொன்றதாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஏசிஎப் தொண்டு நிறுவனம் தற்போது அம்பலப்படுத்தியுள்ளது.
இப்படுகொலை குறித்து இலங்கை அரசு அதிகார பூர்வமாக விசாரணை நடத்தி போர் குற்றம் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்தும் என நம்பியிருந்தோம் என்றும், ஆனால் அந்த நம்பிக்கையை தற்போது இழந்து விட்டோம் என்றும் அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வேதச அளவில் விசாரணை நடத்தி தான் இலங்கையின் மனித உரிமை மீறல்களை வெளியில் கொண்டு வர முடியும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழர்களையும் இனப்படுகொலை செய்த இலங்கை ராணுவம் மனிதநேய பணியாளர்களையும் கொடூரமாக கொலை செய்த விவகாரம் சர்வேச அளவில் இலங்கைக்கு நெருக்கடியை ஏற்ப்படுத்தியுள்ளது.