Home வணிகம்/தொழில் நுட்பம் மலிண்டோ ஏர் புதுடெல்லிக்கு சிறகை விரித்தது

மலிண்டோ ஏர் புதுடெல்லிக்கு சிறகை விரித்தது

718
0
SHARE
Ad

malindon-subang-latest

சிப்பாங், டிசம்பர் 31- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து மலிண்டோ ஏர் நிறுவனம் புது டில்லி பயணத்திற்கான வெள்ளோட்டத்தைத் தொடங்கியது.

போக்குவரத்துத் துறை துணை அமைச்சரான டத்தோ அப்துல் அஸிம் காப்ராவி இந்த வெள்ளோட்ட்த்தை நேற்று தொடக்கி வைத்தார்.

#TamilSchoolmychoice

புதுடில்லிக்கு அடுத்தாண்டு ஜனவரி 2 ஆம் தேதியும் திருச்சிக்கும் அதனைத் தொடர்ந்து மும்பைக்கும் பிப்ரவரி 15 ஆம் தேதியும் மார்ச் 19 ஆம் தேதியும் அமிதாபாத்திற்கும் மலிண்டோ தன் சிறகை விரிக்கும் என்று மலிண்டோவின் தலைமைச் செயல் முறை அதிகாரி சந்திரன் ராமன் மூர்த்தி கூறினார்.

இந்த நகரங்களை தவிர்த்து சென்னை, கொச்சின் ஆகிய நகரங்களுக்கும் மலிண்டோ  பயணத்தை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.