Home நாடு செலவினங்களைக் குறைக்க நஜிப்பின் 11 அம்ச நடவடிக்கைகள்!

செலவினங்களைக் குறைக்க நஜிப்பின் 11 அம்ச நடவடிக்கைகள்!

850
0
SHARE
Ad

Najibகோலாலம்பூர், டிச 31 – அரசாங்கத் துறைகளின் செலவுகளைக் குறைக்கும் வகையில் 11 அம்ச நடவடிக்கைகளை பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று அறிவித்தார். அதன் படி அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் ஆகியோரது உதவித் தொகைகள் 10 சதவிகிதம் குறைக்கப்படவுள்ளது.

அத்துடன் அரசுத் துறைகளில் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றி வருபவர்களுக்கு, குறிப்பாக ஜூசோ சி பிரிவுக்கு மேல் உள்ளவர்களுக்கு உதவித்தொகையில் 5 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதம் வரையில் குறைக்கப்படவுள்ளது என்றும் நஜிப் அறிவித்தார்.

இந்த சிக்கன நடவடிக்கைகள் 2014 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படவிருப்பதாகவும் நஜிப் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்நடவடிக்கைகள் குறித்து தான் துணைப்பிரதமர் முகைதீன் யாசின் மற்றும் அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ அலி ஹம்சா ஆகியோருடன் கலந்தாலோசித்ததாகவும், அதன் பின்னரே இம்முடிவு எடுக்கப்பட்டதென்றும் நஜிப் குறிப்பிட்டார்.

உயர் அதிகாரிகளுக்கான டோல் கட்டண வசதியில் 50 வெள்ளியில் இருந்து 100 வெள்ளிக்கு இடையிலோ அல்லது 30 சதவிகிதமோ குறைக்கப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அரசாங்க ஊழியர்களின் உள் நாட்டு, அனைத்துலக விமான பயணங்களுக்கான பயணச்சீட்டுகள் சிக்கன வகுப்பிற்கு மாற்றம் செய்யப்படவுள்ளன.

இந்த சிக்கன நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கத்தின் கீழ் இயக்கும் அனைத்து துறைகளிலும் மின்சாரக் கட்டணம் தொடங்கி, அன்பளிப்புகள், நிகழ்வுகள் வரை அனைத்திலும் செலவுகள் குறைக்கப்படும் என்றும் நஜிப் அறிவித்தார்.