Home அரசியல் நஜிப் 11 நடவடிக்கைகள்: அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்துங்கள் – மசீச

நஜிப் 11 நடவடிக்கைகள்: அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்துங்கள் – மசீச

911
0
SHARE
Ad

Speech-By-MCA-Youth-National-Chairman-Datuk-Dr-Ir-Wee-Ka-Siong-At-The-MCA-Youth-46th-AGMகோலாலம்பூர், ஜன 2 – செலவினங்களைக் குறைக்க பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்த 11 அம்ச நடவடிக்கைகளை மசீச ஏற்றுக்கொண்டாலும் கூட, வீண் செலவுகளையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் நிறுத்தினால் மட்டுமே இந்த அரசாங்கம் இத்திட்டத்தில் வெற்றியடைய முடியும் என்று மசீச துணைத்தலைவர் டத்தோ டாக்டர் வீ கா சியாங் கூறியுள்ளார்.

“பொதுநிதி வீணாவதை குறைக்க வேண்டும். இல்லையென்றால் அது பட்ஜெட் பற்றாக்குறையையும், குறைகளையும் தேசியப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் என்பதை மசீச அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றது” என்றும் வீ கா சியாங் குறிப்பிட்டுள்ளார்.

“மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் ஆண்டறிக்கையை கருத்தில் கொண்டு, உடனடியாக அரசாங்க ஊழியர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்த வகை செய்து, பொதுநிதி வீணாவதைத் தடுக்க வேண்டும்” என்றும் வீ தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

உருமாற்றத்தை கொள்கையாகக் கொண்டுள்ள அரசாங்கம், அரசாங்க ஊழியர்கள் செய்யும் தவறுகளைக் கண்டறிய விசாரணை மேற்கொண்டு, அவர்கள் தவறு செய்திருந்தால் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீ கா சியாங் தெரிவித்துள்ளார்.