ஜன 27 – இங்கிலாந்தில் இ-சிகரெட்டுகளை பயன்படுத்த 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் இ-சிகரெட்டுகள் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றன.
இதனை பயன்படுத்துவதால் இளைஞர்கள் நிக்கோட்டின் சுவைக்கு எளிதாக பழகி விடக்கூடும் என்றும், எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் எனவும் மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து 18 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு சிகரெட்டுகளை விற்பனை செய்வதை பிரிட்டன் அரசாங்கம் தடை செய்து புதிய சட்டத்தை கொண்டுவரவுள்ளது.
எனினும் இதன் காரணமாக உண்மையான சிகரெட்டுகளை புகைக்க ஆரம்பித்தால், அது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, உண்மையான சிகரெட்டுகளை வாங்கவும் தடை விதிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.