Home நாடு கமலநாதனை தாக்கிய ரிட்சுவான் பகிரங்க மன்னிப்பு!

கமலநாதனை தாக்கிய ரிட்சுவான் பகிரங்க மன்னிப்பு!

489
0
SHARE
Ad

P.KAMALANATHAN-300x221கோலாலம்பூர், ஜன 29 – கல்வி துணை அமைச்சர் கமலநாதனைத் தாக்கிய உலுசிலாங்கூர் அம்னோ உறுப்பினர் ரிட்சுவான் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

உலுசிலாங்கூர் தொகுதியின் அம்னோ இளைஞர் பிரிவு உதவிச் செயலாளரான அவர், தன்னை மன்னித்த  கமலநாதனின் பெரிய மனதை எண்ணி தான் வியப்பதாகவும், அவரின் அந்த மன்னிக்கும் மனப்பான்மைக்கு தான் என்றும் கடமைப்பட்டிருப்பதாகவும் ரிட்சுவான் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் நேற்று முன் தினம் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில், “கமலநாதன் ஒரு பெருந்தன்மையாளர் என்பது அவரது மன்னிக்கும் குணம் உணர்த்தியது. மக்கள் நலனுக்காக தனிப்பட்ட விவகாரங்களை தான் ஒதுக்குவதாக அவர் கூறியது அவரது கடமையுணர்வை காட்டுகின்றது. கமலநாதன் என்னை மன்னித்ததால் , நானும் என் குடும்பமும் பெரிய சிக்கலில் இருந்து மீண்டோம். எனது செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

உலுசிலாங்கூரில் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி நடந்த கிளை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற கமலநாதனிடம் தனது மனைவியின் வேலை இடமாற்றம் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரிட்சுவான், உணர்ச்சி வசப்பட்டு கமலநாதனின் கழுத்தில் குத்தினார்.

இச்சம்பவம் குறித்து ம.இ.கா தலைவர் பழனிவேல் உட்பட பல தலைவர்கள், ரிட்சுவான் மீது நடவடிக்கை எடுக்குமாறு அம்னோவிற்கு எச்சரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.